
NFS Pro Street இன் தோல்வியை தொடர்ந்து EA ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அடுத்த NFS சீரிஸ் NFS Under Cover. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வந்தது under cover. ஆனால் இதன் சோதனை முடிவு.....
ஆசை ஆசையாய் வாங்கி முதலில் போட்டு விளையாண்டவர்களுக்கு ஓபனிங் செமையா இருந்துச்சு. ஸ்டோரி மோடு தொடக்கம் சூப்பரா இருந்துச்சு. ஆனா அதுக்கு அப்புறம் பலத்த ஏமாற்றம்.
ஏதோ ஒரு படம் பார்ப்பது போல் எந்த விதமான பங்களிப்பும் இல்லாமல் அது மட்டும் சென்று கொண்டே இருக்கிறது. எப்போ எந்த ரேஸ் வருதுன்னு தெரியாது. நம்ம இஷ்டத்துக்கு கொஞ்சமும் விளையாட முடியாது. நீங்க எடுக்கும் முடிவு தான் இறுதியானது. ஆனால் முடிவு எடுக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு அவர்கள் தருவது இல்லை
ஒரு முக்கியமான அம்சம். நம்ம விருப்பத்துக்கு சுத்தற Free Roaming இதுல இல்ல. அதான் இதோட பெரிய minus point. Racing control யூஸ் பன்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம கார் அவ்ளோ சீக்கிரம் திரும்ப மாட்டேங்குது. எல்லாத்துக்கும் மேல இந்த கேம் விளையாட நம்ம கணினி கிராபிக்ஸ் ரொம்ப அதிகமா இருக்கணும். இல்லாட்டி ரொம்ப கஷ்டம்.
ஒரு கேம் ல minus இருந்தா பிளஸ்சும் இருக்கும். இந்த கேம் ல பிளஸ் பாயிண்ட் இதுல இருக்கற பெரிய சிட்டி. சிட்டி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. இன்னொரு நல்ல விஷயம், நம்ம செலக்ட் பண்றதுக்கு இதுல நிறைய கார்கள் இருக்கு.
முடிவா சொல்றதுக்கு, NFS மூலமா ரேசிங் உலகத்து தலைவன்னு நிரூபிச்ச EA கேம்ஸ் இன்னிக்கு அதுல தன்னோட பங்களிப்ப சுத்தமா இழந்துகிட்டு வருது.
Recommended Config:
- Intel Core 2 Duo / AMD Phenom (or higher)
- 2 GB RAM
- ATI X1900 / NVIDIA 8600 GTS (or higher)
தீர்ப்பு: NFS Under Cover - FLOP
0 comments:
Post a Comment